செய்திகள்
கோப்புப்படம்

நேபாளம் நாட்டு காட்டுப்பகுதியில் இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலி?

Published On 2018-09-08 09:38 GMT   |   Update On 2018-09-08 09:38 GMT
நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அனைவரும் இறந்ததாக அஞ்சப்படுகிறது. #Choppercrashes #NepalChoppercrash
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.

சுமார் 20 மைல் தூரம் கடந்து சென்றதும் காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.



இந்நிலையில், தாடிங் - நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் உள்ள அந்த காட்டுப்பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது.

அந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் அதில் சென்றவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Choppercrashes #NepalChoppercrash
Tags:    

Similar News