செய்திகள்

பல்கேரியாவில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2018-09-06 21:29 GMT   |   Update On 2018-09-06 21:33 GMT
ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்கேரியாவில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை நேற்று திறந்து வைத்தார். #RamNathKovind
சோபியா :

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஐரோப்பிய நாடுகளான சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் முதல் நாடாக கடந்த 2-ம் தேதி சிப்ரஸ் பயணம் செய்த அவர், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். பின்னர் பகேரியா சென்ற அவர் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி ருமேன் ராடேவுடன் நடந்த சந்திப்பில் பல்கேரியா-இந்தியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா, அணுசக்தி மற்றும் பிறதுறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இறுதியாக, சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.

அதன் பின்னர் பல்கேரியா பயணத்தை நிறைவு செய்த அவர் அங்கிருந்து செக் குடியரசு சென்றடைந்தார். #RamNathKovind
Tags:    

Similar News