செய்திகள்

ஆஸ்திரேலியா ஆளும்கட்சி தலைவராக பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் தேர்வு

Published On 2018-08-21 12:17 GMT   |   Update On 2018-08-21 12:17 GMT
ஆஸ்திரேலியா நாட்டை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AustralianPM #Turnbull
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை மந்திரியும் முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியுமான பீட்டர் டட்டன் களமிறங்கினார். மால்கோல்ம் டர்ன்புல்-லை வீழ்த்த முன்னாள் பிரதமர் டோனி அபாட் முயன்றதாக தெரிகிறது.

இந்த தேர்தலில் 48 வாக்குகளை பெற்ற மால்கோல்ம் டர்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பீட்டர் டட்டன் 35 வாக்குகளை பெற்றார்.

மீண்டும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப்-பை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரே மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. #AustralianPM #Turnbull
Tags:    

Similar News