செய்திகள்

அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டி - டிரம்ப்

Published On 2018-07-15 07:53 GMT   |   Update On 2018-07-15 07:53 GMT
2020-ம் ஆண்டில் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர் என கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியிலிருந்து தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என கூறியுள்ளார். #TrumpInUk
லண்டன்:

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப்.  இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன். 

அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல் தெரிகிறது. ஜனநாயக கட்சியில் தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார்

பொதுவாக இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பேசும் விவரங்களை பற்றி தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை. ஆனால், டிரம்பிடம் பேட்டி கண்ட பியெர்ஸ் மோர்கன் பிரெக்சிட் பற்றி ராணியிடம் ஆலோசனை மேற்கொண்டீர்களா? என எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அவர், ஆம் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் கூறினார்.  அவர் கூறியது சரி.  அது எவ்வளவு சிக்கலான விசயம் ஆக போகிறது என்பது பற்றி யாரிடமும் எந்த கருத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.
Tags:    

Similar News