செய்திகள்

சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் ஆதரவு படை வீரர்கள் 52 பேர் பலி

Published On 2018-06-18 09:12 GMT   |   Update On 2018-06-18 11:53 GMT
சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் வெளிநாட்டு ஆதரவு படை வீரர்கள் 52 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syria
பெய்ரூட் :

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிரியா-ஈராக் எல்லை அருகே நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரியா நாட்டினர் அல்லாத சிரியா அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சிரியா - ஈராக் எல்லை அருகே உள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்க கூட்டுப்படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரியாவை சேர்ந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது. 

30 ஈராக்கிய ராணுவ வீரர்கள், 16 சிரிய வீரர்கள் மற்றும் இரத வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய மாகாணமான டேய்ர் எஸ்ஸோர் பகுதி ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அமெரிக்க கூட்டுப்படைகளும் சிரியாவிற்கு ஆதரவாக சண்டையிடும் ரஷிய படைகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து தனித்தனியே சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Syria
Tags:    

Similar News