செய்திகள்

தொடர் மின்னல்களால் நூற்றுக்கணக்கில் விமானங்கள் தாமதம் - பயணிகள் கடும் அவதி

Published On 2018-05-27 19:40 GMT   |   Update On 2018-05-27 19:40 GMT
இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏற்பட்ட தொடர் மின்னல்களால் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். #StanstedAirport #Lightning #FlightsDelayed
லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.



இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம். விமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து விமான நிலையத்திடம் அறிந்து கொள்ள வேண்டும் என பயணிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விடுமுறை தினமான நேற்று விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். #StanstedAirport #Lightning #FlightsDelayed
Tags:    

Similar News