search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள் தாமதம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.
    • தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இடி மின்னலுடன் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டியது.

    நள்ளிரவு அதிகரித்த மழை அதிகாலை வரை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அரபு நாடுகளில் இருந்து அதிகாலையில் தான் சென்னைக்கு விமானங்கள் வருவது வழக்கம்.

    அதுபோல இன்று அதிகாலை வந்த விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியவில்லை. ஜார்ஜாவில் இருந்து 168 பயணிகளுடன் சென்னைக்கு அதிகாலை 3.40 மணிக்கு வந்த விமானத்தை தரை இறக்க முடியவில்லை. துபாயில் இருந்து 238 பயணிகளுடன் 3.50 மணிக்கு வந்த விமானமும் தரை இறக்க முடியாமல் வட்டமிட்டன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகளுக்கு இங்கு தரை இறக்க வேண்டாம் பெங்களூருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 2 விமானங்கள் பெங்களூருக்கு சென்றன.

    இதே போல இரவு 11.45 மணிக்கு துருக்கியில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.

    தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்களை இயக்கக் கூடிய அளவுக்கு இயல்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
    • அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.

    ஆலந்தூர்:

    வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.

    • டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது.
    • காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது.

    இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அங்கு 2.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவானது.

    அதாவது 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே காணப்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் காலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    மேலும் டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது. காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    இதனால் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றன. ஆனாலும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    டெல்லி விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் விமானங்கள் வந்து இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்து சேரும் விமானங்கள் காலதாமதமாகவே வருகின்றன.

    அதன்படி டெல்லியில் 20 விமானங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவை காலதாமதமாக வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக விமானங்கள் வேறு எங்கும் திருப்பிவிடப்படவில்லை. காலதாமதமாக தரை இறங்குகிறது.

    ×