search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இடி மின்னலுடன் மழை- சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு திரும்பி சென்ற 3 விமானங்கள்
    X

    இடி மின்னலுடன் மழை- சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு திரும்பி சென்ற 3 விமானங்கள்

    • சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.
    • தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இடி மின்னலுடன் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டியது.

    நள்ளிரவு அதிகரித்த மழை அதிகாலை வரை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அரபு நாடுகளில் இருந்து அதிகாலையில் தான் சென்னைக்கு விமானங்கள் வருவது வழக்கம்.

    அதுபோல இன்று அதிகாலை வந்த விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியவில்லை. ஜார்ஜாவில் இருந்து 168 பயணிகளுடன் சென்னைக்கு அதிகாலை 3.40 மணிக்கு வந்த விமானத்தை தரை இறக்க முடியவில்லை. துபாயில் இருந்து 238 பயணிகளுடன் 3.50 மணிக்கு வந்த விமானமும் தரை இறக்க முடியாமல் வட்டமிட்டன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகளுக்கு இங்கு தரை இறக்க வேண்டாம் பெங்களூருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 2 விமானங்கள் பெங்களூருக்கு சென்றன.

    இதே போல இரவு 11.45 மணிக்கு துருக்கியில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை.

    தோகா, துபாய், லண்டன், ஜார்ஜா, அந்தமான் உள்ளிட்ட 10 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்களை இயக்கக் கூடிய அளவுக்கு இயல்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

    Next Story
    ×