என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிங்கப்பூர், டெல்லி-மும்பை, விமானங்கள் தாமதம்
    X

    சிங்கப்பூர், டெல்லி-மும்பை, விமானங்கள் தாமதம்

    • பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்.
    • விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதம்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் வந்து இருந்தனர்.

    ஆனால் திடீரென சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

    சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை திடீரென தாமதமாக சென்றதால் அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதி

    அடைந்தனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×