என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இருந்து புறப்பட்ட 4 விமானங்கள் 3 மணிநேரம் தாமதம்- பயணிகள் கடும் அவதி
- சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 3 மணி நேரம் தாமதமாக, காலை 8.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
- விமானங்கள் தாமதத்திற்கான காரணம் குறித்து, பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 1½ மணிநேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இலங்கை கொழும்பு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா பயணிகள் விமானம், சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 2.25 மணிக்கு, புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 3 மணி நேரம் தாமதமாக, காலை 8.40 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சுமார் 2 மணிநேரம் தாமதமாக, நள்ளிரவு 12.10 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள், பல மணி நேரம், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து, கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்த விமானங்கள் தாமதத்திற்கான காரணம் குறித்து, பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. ஆத்திரம் அடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






