செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் சர்தாரி போட்டி

Published On 2018-05-27 10:34 GMT   |   Update On 2018-05-27 10:34 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு ஜூன் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார். #Pakistanelection #expresidentZardari
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் 2008-ம் ஆண்டு முதல் 2013 வரை அந்நாட்டின் பதினொன்றாவது அதிபராக பெனாசிரின் கணவரான ஆசிப் அலி சர்தாரி பதவி வகித்தார்.

அதற்கு முன்னதாக லயாரி மற்றும் நவாப்ஷா பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக 1990 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் இருமுறை பதவி வகித்துள்ள சர்தாரி(62), வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தற்போது தெரிவித்துள்ளார்.

சிந்து மாகாணத்தின் முதல் மந்திரி சையத் முராத் ஷா வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிப் அலி சர்தாரி, இந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் தனது வேட்பு மனுவை விரைவில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanelection #expresidentZardari
Tags:    

Similar News