செய்திகள்
கியூசெப்பீ கோண்டே

இத்தாலியில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்கிறது - அரசியல் பின்புலம் இல்லாதவர் பிரதமராகிறார்

Published On 2018-05-23 13:32 GMT   |   Update On 2018-05-23 13:32 GMT
இத்தாலி பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. #Italy
ரோம்:

சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி பாராளுமன்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 11 நாட்களாக அரசியல் சூழல் முடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி - மத்திய வலதுசாரி கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த கூட்டணியை ஆட்சியில் அமர்த்த முக்கிய பங்காற்றிய சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே உடன் இன்று அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா சந்தித்து, பிரதமராக பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். 

அதிபரின் அழைப்புக்கு பைவ் ஸ்டார் லீக் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. கியூசெப்பீ கோண்டே எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News