செய்திகள்

ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் தீவிரம் - மாஸ்கோ விரைந்தார் பெஞ்சமின் நேதன்யாகு

Published On 2018-05-09 10:25 GMT   |   Update On 2018-05-09 10:25 GMT
அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் காய் நகர்த்தி வருகிறது. இதையடுத்து ரஷியா அதிபரை சந்திப்பதற்காக பெஞ்சமின் நேதன்யாகு மாஸ்கோ விரைந்தார். #BenjaminNetanyahu #VladimirPutin #IranNuclearDeal
ஜெருசலேம்:

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

இதற்கிடையில், ஈரான் ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. எனவே, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில், ரஷியா அதிபரை சந்திப்பதற்காக பெஞ்சமின் நேதன்யாகு இன்று மாஸ்கோ விரைந்துள்ளார்.



சமீபகாலமாக சிரியாவில் ஈரான் செலுத்திவரும் ஆதிக்கம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடிக்கடி தொலைபேசி மூலம் ரஷியா அதிபர் புதினை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திவந்த நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெருசலேம் நகரிலிருந்து மாஸ்கோ புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நேதன்யாகுவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

'சிரியாவில் தற்பொழுது உள்ள சூழ்நிலையின் படி ரஷியா-இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. எனக்கும் புதினுக்கும் இடையிலான சந்திப்புகள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகவே இருந்துள்ளன. அவ்வகையில், இந்த சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் ஆனதுதான்' என அவர் தெரிவித்தார். #BenjaminNetanyahu #VladimirPutin #IranNuclearDeal


Tags:    

Similar News