செய்திகள்

பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்ற கால்நடை திருடும் கும்பல்

Published On 2018-05-07 04:55 GMT   |   Update On 2018-05-07 04:55 GMT
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் கால்நடை திருடும் கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளது.
நைஜர்:

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள காதுனா மாநிலம் ப்ரின் க்வாரி என்ற கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆயுதம் தாங்கிய கால்நடை திருடும் கும்பல் அந்த கிராமத்தில் உள்ள 45 பேரை கொன்றுள்ளனர். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமானோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிராந்திய அரசு, கொள்ளையர்கள் விரைவில் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் என உறுதிபட கூறியுள்ளது. கடந்த மாதம் இதே போல, 14 சிறார்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டின் பல கிராமப்பகுதிகளில் கால்நடைகளை திருடுவதற்கென பல குழுக்கள் உள்ளனர்.

கால்நடைகளை திருடி இறைச்சி நிறுவனங்களிடம் விற்று லாபம் பார்ப்பது இவர்களின் வழக்கமான ஒன்றாக உள்ளது. திருடும் போது கிராமத்தினர் இடையூறு செய்தால் மொத்தமாக அவர்களை கொல்லவும் இந்த குழுக்கள் தயங்குவது இல்லை. 
Tags:    

Similar News