செய்திகள்

ஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு - மக்கள் அவசரமாக வெளியேற உத்தரவு

Published On 2018-05-04 08:25 GMT   |   Update On 2018-05-04 08:25 GMT
ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் கிலுயுயே எரிமலை வெடித்து சிதறியதில் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. #valcanoeruption
நியூயார்க்:

ஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.

மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #valcanoeruption
Tags:    

Similar News