செய்திகள்

இந்தியரிடம் லஞ்சம் வாங்கிய இலங்கை அதிபர் சிறிசேனாவின் உதவியாளர்

Published On 2018-05-04 05:36 GMT   |   Update On 2018-05-04 05:36 GMT
இந்திய தொழில் அதிபரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக இலங்கை அதிபர் மைத்ரிய சிறிசேனாவின் தலைமை உதவியாளரை லஞ்ச ஊழல் தடுப்பு கமி‌ஷன் அதிகாரிகள் கைது செய்தனர்.#SriLanka #SirisenaAssistant
கொழும்பு:

இலங்கை அதிபர் மைத்ரிய சிறிசேனாவின் தலைமை உதவியாளர் ஐ.கே. மகானமா. இவர் இந்திய தொழில் அதிபரிடம் 2 கோடி இலங்கை ரூபாய் லஞ்சமாக பெற்றார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு கமி‌ஷன் அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருடன் சேர்ந்து பி. திச நாயகே என்பவரும் பிடிபட்டார். இவர் அரசின் டிம்பர் கார்ப்பரேசனின் தலைவராக இருக்கிறார்.

மகானமா அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளராகும். முன்பு நில அமைச்சக துறையில் செயலாளராக இருந்தார். அப்போது கந்தாலை மாநிலத்தில் சர்க்கரை ஆலை தொடங்க இந்திய தொழில் அதிபர் விண்ணப்பித்து இருந்தார்.

அதற்கு அனுமதி வழங்க மகானமா லஞ்சம் பெற்ற போது சிக்கினார். இந்த தகவல் அதிபர் சிறிசேனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் விசுவாசி காமிளி சேனாரத் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.#SriLanka #SirisenaAssistant
Tags:    

Similar News