செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

Published On 2018-04-23 06:31 GMT   |   Update On 2018-04-23 06:31 GMT
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். #earthquake #Indonesia
அகர்தலா:

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் திரண்டனர். நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ, உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

கடைசியாக ஜனவரி மாதம் 13-ம் தேதி 6.1 ரிக்டர் மற்றும் 8.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மசூதிகள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. #earthquake #Indonesia
Tags:    

Similar News