செய்திகள்

இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் - பிரதமர் மோடி 27-ம் தேதி சீனா பயணம்

Published On 2018-04-22 12:49 GMT   |   Update On 2018-04-22 12:49 GMT
இந்தியா-சீனா இடையில் உள்ள கசப்புக்களை நீக்கும் வகையில் சீன அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வுஹான் நகருக்கு செல்கிறார். #China #SCO #PMModi
பீஜிங்:

இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் வரும் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை இன்று சந்தித்த சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட இந்தியா - சீனா இடையிலான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார்.



இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுஷ்மாவுடன் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட தலைவர்கள் மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க வரும் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் க்சி ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்தார். #SCO #PMModi #Modi #China
Tags:    

Similar News