செய்திகள்

பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்

Published On 2018-04-21 21:13 GMT   |   Update On 2018-04-21 21:27 GMT
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92வது பிறந்தநாளைக் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடினார். #QueensBirthday #HappyBirthdayHerMajesty

லண்டன்:

இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். இவர் 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த்தின் தலைவரும் இவராவார். 

எலிசபெத் 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி லண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947-ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இளவரசர் சார்லசு, இளவரசி ஆன், இளவரசர் ஆண்ட்ரூ, மற்றும் இளவரசர் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.



66 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரிட்டன் அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார். விக்டோரியா மகாராணி மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.

எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.



இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். வழக்கமாக ராணி தமது பிறந்தநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவார். ஆனால் இம்முறை டாம் ஜோன்ஸ், கைலி மினோக், ஸ்டிங், ஷேகி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர். #QueensBirthday #HappyBirthdayHerMajesty
Tags:    

Similar News