செய்திகள்

தினமும் ஒன்றரை லட்சம் டன் உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்

Published On 2018-04-19 06:11 GMT   |   Update On 2018-04-19 09:41 GMT
அமெரிக்கர்கள் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை வீணாக்குவது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வீணாக்கப்படும் உணவு வகைகள் மற்றும் தண்ணீர் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் அமெரிக்கர்கள் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனர். 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி காலன் தண்ணீரும் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.

உணவு பொருட்களில் 39 சதவிகிதம் பழங்களும், காய்கறிகளும் வீணாக குப்பையில் கொட்டப்படுகிறது. 17 சதவீதம் பால் பொருட்கள், 14 சதவீதம் இறைச்சி, முட்டை உணவு வகைகள், ஐஸ் மற்றும் குளிர் பானங்கள், நொறுக்கு தீனி பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன.


2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு அமெரிக்கரும் தினசரி 30 சதவீத கலோரி சக்தி கொடுக்கும் உணவு வகைகளை வீணாக்குகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 422 கிராம் (ஒரு பவுண்டு) உணவை குப்பையில் கொட்டுகின்றனர்.
Tags:    

Similar News