செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா - சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என விஞ்ஞானிகள் தகவல்

Published On 2018-04-17 08:36 GMT   |   Update On 2018-04-17 08:36 GMT
பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #plasticeatingenzyme
வாஷிங்டன்:

பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களை சென்றடைகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன். மீன்களின் வயிற்றிற்குள் பிளாஸ்டிக் செல்வதால் அவை இறக்கின்றன. இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்த போதிலும் பிளாஸ்டிக்கை முழுமையாக அளிக்க முடியவில்லை.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் புதிய பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்தனர். இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற இந்த பாக்டீரியா பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்பட்ட பாலிஎத்திலீன் டெராபைத்லேட்டை அழிக்கும் திறன் கொண்டது.

இந்த என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சியில் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும். என்சைம்களில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளன. அதன் முடிவில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக வழியை கண்டுபிடிக்க முடியும். #plasticeatingenzyme
Tags:    

Similar News