செய்திகள்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம்- தவறு நடந்ததை ஒப்புக்கொண்டது பேஸ்புக்

Published On 2018-03-22 05:20 GMT   |   Update On 2018-03-22 05:20 GMT
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.#Facebook
லண்டன்:

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது என மத்திய மந்திரி எச்சரித்துள்ளார்.


இந்நிலையில், பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். செயலிகள், பயனர்களின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். #Tamilnews
Tags:    

Similar News