செய்திகள்

ஜப்பானில் பாட்டிலுக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட குழந்தைகள் சடலங்களால் பரபரப்பு

Published On 2018-03-13 21:29 GMT   |   Update On 2018-03-13 21:29 GMT
ஜப்பானில் ஒரு வீட்டின் புதுப்பிக்கும் பணியின் போது தரை பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடி பாட்டில்களுக்குள் குழந்தைகளின் சடலங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Japan #BabiesinBottles
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை சமீபத்தில் ஒருவர் வாங்கி, வீட்டை புதுப்பிக்கும் பணிகளை வேலை ஆட்களை வைத்து துவங்கினார். அப்போது தரை பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடி பாட்டில்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அந்த பாட்டிலில் நான்கு குழந்தைகளின் சடலங்கள் தொப்புள் கொடியுடன் இருந்தது. மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி அக்குழந்தைகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலை ஆட்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் இதை செய்தது யார்?, அந்த குழந்தைகள் யாருடையது?, எதற்காக இவ்வாறு செய்துள்ளனர்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜப்பான் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #Japan #BabiesinBottles #tamilnews
Tags:    

Similar News