செய்திகள்

காந்தியின் அரிய புகைப்படம் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்

Published On 2018-03-10 05:26 GMT   |   Update On 2018-03-10 05:26 GMT
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட காந்தியின் அரிய புகைப்படம் ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது.
வாஷிங்டன்:

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இங்கிலாந்து அரசுடன் வட்ட மேஜை மாநாடு மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2-வது வட்ட மேஜை மாநாடு லண்டனில் 1930 முதல் 1932-ம் ஆண்டுவரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காந்தி மற்றும் மதன் மோகன் மாலவியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் காந்தி இணைந்து இருக்கும் போட்டோ எடுக்கப்பட்டது.



இந்த போட்டோவில் பவுன்டன் பேனாவினால் எம்.கே. காந்தி என அவர் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய அரிய போட்டோ அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆர்.ஆர். மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இப்போட்டோ ரூ.28 லட்சத்துக்கு (41,806 டாலர்) ஏலம் போனது. இதை ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. #Tamilnews
Tags:    

Similar News