செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை டூடுலால் கொண்டாடும் கூகுள்

Published On 2018-03-08 09:23 GMT   |   Update On 2018-03-08 09:23 GMT
சர்வதேச மகளிர் தினத்தை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது. #Googledoodle #InternationalWomensDay

புதுடெல்லி:

சர்வதேச மகளிர் தினத்தை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

1789-ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடந்த போது சமத்துவம், வாக்குரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வேண்டி பெண்கள் போராட்ட களத்தில் இறங்கினர். அதன் விளைவு மன்னர் லூயிஸ் பிலிப் தன் பதவியைத் துறந்தான். ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவிலும் போராட்டம் பரவியது. இதையடுத்து பிரான்சின் 2-ம் குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் 1848 மார்ச் 8-ல் பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.



1910-ம் ஆண்டு ஓப்பன் ஹேகலில் வீரப் பெண்மணி கிளாராஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடந்தது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. 1920-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸண்டிரா ஹெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் காட்டுகிறது.



சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்மையை போற்றும் வகையில் சிறப்பு புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #Googledoodle #InternationalWomensDay #tamilnews
Tags:    

Similar News