செய்திகள்

அமெரிக்க எச்.1பி விசா நடைமுறை புதிய சட்டத்தை உருவாக்க காலவரம்பு நீட்டிப்பு

Published On 2018-03-03 07:01 GMT   |   Update On 2018-03-03 07:02 GMT
அமெரிக்க எச்.1பி விசா நடைமுறையில் புதிய சட்டம் கொண்டுவருவதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எச்.1பி விசா கிடைக்க வாய்ப்பு உள்ளது. #H1Bvisa #DonaldTrump

வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எச்.பி.-1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசா இருந்தால்தான் அங்கு வேலை பார்க்க முடியும். இந்த விசா 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பின்னர் 7, 3 ஆண்டு காலத்திற்கு நீட்டிப்பு செய்து அதன்பிறகு நிரந்தரமாக தங்கி வேலை பார்த்து கிரின் கார்டு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அது கிடைக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அதேபோல எச்.பி.1 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் மனைவி அல்லது கணவருக்கு எச்.1.பி என்ற விசா வழங்கப்படும். அந்த விசா இருந்தால் அவர்களும் அங்கு வேலை செய்ய முடியும். தொழில்களும் தொடங்க முடியும். வங்கிகளிலும் கணக்கு வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் எச்.1பி விசாவில் மாற்றம் கொண்டு வந்து புதிய சட்டம் உருவாக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதனால் அமெரிக்காவில் வெளிநாட்டினர் கணவர் அல்லது மனைவிக்கு இனி வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை இருந்தது. இந்த சட்டம் உருவாக்குவதற்கான சட்ட வரையரையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

ஆனால் இப்போது சட்டவரைவை உருவாக்க ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே புதிய சட்டம் அடுத்த ஆண்டு மத்தியில் தான் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே எச்.14 விசா விண்ணப்பித்தவர்களும் தொடர்ந்து விசா கிடைக்கும். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்துள்ள கணவன் - அல்லது மனைவி ஏராளமானோர் எச்.14 விசா விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

புதிய சட்டம் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எச்.1பி விசா கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களும் வேலை வாய்ப்பு பெறலாம். #H1Bvisa #DonaldTrump #tamilnews

Tags:    

Similar News