செய்திகள்
கோப்புப்படம்

இலங்கை ராணுவத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வேலை

Published On 2018-02-19 11:45 GMT   |   Update On 2018-02-19 11:45 GMT
இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்த 11 முன்னாள் விடுதலைப் புலிகள் உள்பட 50 பேருக்கு விவசாய வேலைகளில் உதவிடும் பணி அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:

இலங்கையில் முள்ளிவாய்க்கால் உச்சகட்டப் போரின் போது ராணுவத்திடம் சுமார் 11 ஆயிரம் தமிழ் போராளிகள் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் அவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தொழில் கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவர்களில் ராணுவத்திடம் சரண் அடைந்த 11 முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு உள்பட 50 பேருக்கு விவசாய வேலைகளில் ராணுவத்தினருக்கு உதவிடும் பணி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் ராணுவ சீருடை அணிய மாட்டார்கள். மற்றபடி சம்பளம், ஓய்வூதியம் உள்பட ராணுவ வீரர்கள் பெறும் அனைத்தும் இவர்கள் 50 பேருக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். #Tamilnews
Tags:    

Similar News