செய்திகள்

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை

Published On 2018-02-19 05:47 GMT   |   Update On 2018-02-19 05:47 GMT
சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரியாத்:

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் (32) பதவி ஏற்றதில் இருந்து அங்கு பல சமூக நல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

‘வி‌ஷன் 2030’ என்ற மறுசீரமைப்பு திட்டத்தில் பெண்களின் பங்கை மூன்றில் 2 பங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து பல்லாண்டுகளாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பெண்கள் கால்பந்து போட்டிகளை நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இது போன்ற பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் தொழில் தொடங்க ஆண் பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும். அதாவது கணவர், தந்தை அல்லது சகோதரன் அனுமதி கடிதத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

தற்போது பெண்கள் தொழில் தொடங்க இத்தகைய அனுமதி கடிதம் தேவையில்லை. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க எந்த தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் தனியார் துறைகளை அதிகரித்து பொருளாதார சீரழிவை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. tamilnews
Tags:    

Similar News