செய்திகள்

இம்ரான்கான் முன்னாள் மனைவி பாகிஸ்தானில் இருந்து ஓட்டம்

Published On 2018-02-06 07:32 GMT   |   Update On 2018-02-06 07:32 GMT
இம்ரான்கானின் 2-வது மனைவி ரீகம் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வேறு நாட்டுக்கு சென்று விட்டதாக பாகிஸ்தானின் ஜியோ டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தற்போது பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்காப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

இவருக்கு திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லை. முதலில் இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் மகள் ஜெமீமாவை திருமணம் செய்தார். இவர் மூலம் 2 மகன்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு ஜெமீமா இவரை விவாகரத்து செய்தார்.

அதைதொடர்ந்து பாகிஸ்தானில் டி.வி. தொகுப்பாளராக இருந்த ரீகம் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. திருமணமான 3 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டு விவாகரத்து நடந்தது. இந்த நிலையில் அவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக வதந்தி பரவி வந்தது.


இந்த நிலையில் இம்ரான்கானின் 2-வது மனைவி ரீகம் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வேறு நாட்டுக்கு ஓட்டம் பிடித்ததாக பாகிஸ்தானின் ஜியோ டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

எனது ஊழியருக்கு மர்ம நபர்களால் கடந்த செப்டம்பர் முதல் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. சமீபகாலமாக அது அதிகரித்துவிட்டது. எனக்கு எந்த அரசியல் கட்சியும் பக்கபலமாக இல்லை. அதனால் உயிருக்கு பயந்து எனது மகளுடன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாக ரீகம் கான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரீகம்கான் இந்திய டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘‘பல வி‌ஷயங்கள் உள்ளன. ஆனால் அதுகுறித்து நான் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறேன். ஆனால் தற்போது மவுனம் கலையும் நேரம் வந்துவிட்டது என கருதுகிறேன்’’ என தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News