செய்திகள்

பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலி

Published On 2018-02-03 19:03 GMT   |   Update On 2018-02-03 19:03 GMT
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவத்துக்கு சொந்தமான விளையாட்டு முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Pakistan #SuicideAttack
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவத்துக்கு சொந்தமான விளையாட்டு முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தின் கபல் டெஹ்சில் நகரில் அந்நாட்டு ராணுவத்தினருக்கு சொந்தமான விளையாட்டு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் மீது நேற்று மாலை அத்துமீறி நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ரானுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலிக்கு டெஹ்ரெக்-ஈ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Pakistan #SuicideAttack #tamilnews
Tags:    

Similar News