செய்திகள்

ஜப்பானில் முதல் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி

Published On 2018-01-27 05:53 GMT   |   Update On 2018-01-27 05:53 GMT
டோக்கியோவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி கலந்துகொண்டார்.
டோக்கியோ:

இந்தியாவில் நேற்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசு தின விழாக்கள் நடைபெற்றன. அவ்வகையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள இந்திய தூதரகத்திலும் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்தறை மந்திரி டாரோ கோனோ பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, ‘ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நட்பு நாடுகளாக இந்தியாவும் ஜப்பானும் விளங்குகின்றன. 2017-ல் இரு நாடுகளின் உறவுகளில் பல நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டன’ என்று குறிப்பிட்டார்.

ஜப்பான் வரலாற்றில் வெளியுறவுத்துறை மந்திரி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் ஜப்பான் நாட்டிற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News