செய்திகள்

வடகொரியா - தென் கொரியா இடையிலான ஒப்பந்தம்: ஐ.நா. சபை பொது செயலாளர் பாராட்டு

Published On 2018-01-10 00:28 GMT   |   Update On 2018-01-10 00:28 GMT
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். #North Korea #South Korea
நியூயார்க்:

வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றன. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, தென்கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ‘ஹாட்லைன்’ தொலைபேசி (நேரடி தொலைபேசி) வசதியை தொடங்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் ஹாட்லைன் தொலைபேசி மீண்டும் துவக்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை தணிக்க உதவும். இது அமைதி திரும்புவதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். #North Korea #South Korea #tamilnews
Tags:    

Similar News