செய்திகள்

தனது மனநிலை குறித்து கேள்வி எழுப்பிய புத்தகம்: எழுத்தாளர் மீது டிரம்ப் பாய்ச்சல்

Published On 2018-01-07 07:08 GMT   |   Update On 2018-01-07 07:08 GMT
அமெரிக்க அதிபராக இருக்க டிரம்ப் தகுந்த மனநிலையில் உள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய புத்தகத்தின் ஆசிரியர் மீது டிரம்ப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் மைக்கேல் வோல்ப் என்பவர் எழுதிய ‘பயர் அண்ட் ப்யூனி: இன்சைட் தி டிரம்ப் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில், டிரம்ப்பின் மனநிலை குறித்து பல கேள்விகளை ஆசிரியர் எழுப்பியுள்ளார். அதிபராக தொடர்வதற்கு தேவையான மனநிலையை அவர் கொண்டுள்ளாரா? என்றும் கேட்டுள்ளார்.

கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது குறுகிய கால நினைவாற்றல் உள்ளிட்ட காரணங்களால் டிரம்ப் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தகத்தில் கூறியுள்ள வோல்ப், "முன்பெல்லாம் கூறியதையே, வார்த்தை மாறாமல் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது அதை 10 நிமிடங்களுக்குள் செய்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும் வோல்ப் முன்வைக்கவில்லை. இந்நிலையில், புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புத்தகத்தின் ஆசிரியர் மீது கடுமையான விமர்சனத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.

மோசடி என்றும் பொய்களால் நிரம்பிய இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பொய்யர் என டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும்,  வெள்ளை மாளியை அணுகி உரையாடி தகவல்களைத் தெரிந்துகொள்ள அவருக்கு தாம் அனுமதி ஏதும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News