செய்திகள்

விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு சினிமா படம் ஒளிபரப்பு: நாசா திட்டம்

Published On 2017-12-15 06:15 GMT   |   Update On 2017-12-15 06:16 GMT
சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு சினிமா படம் ஒளிபரப்ப நாசா மையம் திட்டமிட்டுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகிறது. அதற்காக பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான தலா 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் 6 மாதங்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.

அவ்வாறு தங்கியிருக்கும் வீரர்களுக்கு சினிமா படம் ஒளிபரப்ப நாசா மையம் திட்டமிட்டுள்ளது. இன்று புதிதாக ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற ஆங்கிலபடம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் பார்க்கும் வகையில் ஒளி பரப்பப்படுகிறது. அதற்கான பணியில் ‘நாசா’ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



அதுகுறித்து ‘நாசா’ அதிகாரி டேன் ஹூயாத் கூறும்போது, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை திரையிடும் சரியான நேரம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் இப்படம் விண்வெளி வீரர்கள் பார்க்கும் வகையில் திரையிடப்படும்.

‘டிஜிட்டல் பைல்’ மூலம் லேப்டாப்பில் தெரியும் வகையில் இது ஒளிபரப்பப்படும் என்றார்.
Tags:    

Similar News