செய்திகள்

கடந்த ஆண்டில் லண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீச்சு

Published On 2017-12-03 06:34 GMT   |   Update On 2017-12-03 06:34 GMT
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கடந்த ஆண்டு மட்டும் 454 பேர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதால் தெருக்களில் சுதந்திரமாக நடமாட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி போன்ற ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களை விட ‘ஆசிட்’ வீச்சு சாதாரணமாகி விட்டது.

இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 பேரும், 2014-ம் ஆண்டில் 166 பேரும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிட் வீச்சு சர்வ சாதாரணமாக நடைபெறுவதால் லண்டன் வீதிகளில் சுதந்திரமாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆசிட் வகைகள் எளிதாக கிடைப்பதுவே காரணம் என கூறப்படுகிறது.

எனவே ஆசிட் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Tags:    

Similar News