செய்திகள்

பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க ராக்கெட் - கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் முயற்சி

Published On 2017-11-22 07:16 GMT   |   Update On 2017-11-22 07:16 GMT
பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக தயாரித்த ராக்கெட்டில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் பறக்க உள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் புதிய ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ராக்கெட் மூலம் பூமி தட்டையாக உள்ளதை நிரூபிக்க போவதாக கூறினார்.



அந்த ராக்கெட்டை 1800 அடி உயரத்திற்கு செலுத்தப்பட போவதாக அவர் கூறியுள்ளார். 800 கி.மீ. வேகத்தில் செல்லும் அந்த ராக்கெட்டில் மைக் பயணம் செய்வார். மேலே சென்றவுடன் பூமியின் அமைப்பை படம் எடுத்து அது தட்டையாக இருப்பதற்கான ஆதரங்களை சேகரித்து வருவதாக கூறினார்.

இதற்கும் முன் 2014 ம் ஆண்டு மைக் இது போன்று ராக்கெட் ஒன்றை செய்து அதில் பயணம் செய்தார். ராக்கெட்டானது சிறுது உயரத்திற்கு சென்ற பின் கீழே விழுந்தது. அதன் பின் இரண்டாவது முயற்சியாக வருகின்ற சனிக்கிழமை ராக்கெட்டை செலுத்த உள்ளார்.


மைக் பேசுகையில், 'எனக்கு அறிவியலில் நம்பிக்கை இல்லை. எல்லாமே ஃபார்முலா தான். சரியான ஃபார்முலாவை பயன்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். நான் கண்டிப்பாக பூமி தட்டையானது என்பதை நிரூபணம் செய்வேன்' என கூறினார்.

Tags:    

Similar News