செய்திகள்

4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையம்

Published On 2017-11-20 08:07 GMT   |   Update On 2017-11-20 08:07 GMT
துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையத்தை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்காரா:

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்து பட்டையத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்பட்டையத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து பட்டையம் எனக்கூறப்படுகிறது.



4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவிற்கு திருமணமான பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த பட்டையத்தில் எழுதி இருந்தது.


அந்த ஒப்பந்தத்தின் படி லகுபியும் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் லகுபியுமிற்கு வெள்ளி வழங்க வேண்டும்.

இந்த பட்டையம் தற்போதைய துருக்கியின் குல்தீப் கனேஷில் உள்ள ஆராய்ச்சி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News