செய்திகள்

உலக சாதனை படைத்த லியானர்டோவின் 500 ஆண்டு பழைய ஓவியம் - 450 மில்லியன் டாலருக்கு ஏலம்

Published On 2017-11-16 07:23 GMT   |   Update On 2017-11-16 07:23 GMT
புகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.
நியூயார்க்:

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. ’சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.



இந்த ஓவியம் அதிக பணத்திற்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2015 ம் ஆண்டு 179.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிகாசோவின் 'த உமன் ஆஃப் அல்ஜேரிஸ்' ஓவியத்தின் சாதனையை முறியடித்து இந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.


வின்சியின் ஓவியத்தில் இயேசு கையில் கிரிஸ்டல் பந்தை கையில் வைத்துள்ளார். மறு கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது. ஓவியத்தை பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்தனர். இந்த ஓவியம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

Tags:    

Similar News