செய்திகள்

சவுதி அரேபியா: விளையாட்டின் ஒரு பகுதி யோகா - அரசு அங்கீகரிப்பு

Published On 2017-11-15 01:21 GMT   |   Update On 2017-11-15 01:21 GMT
சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்த நிலையில் விளையாட்டின் ஒரு பகுதியாக யோகாவை அங்கீகரித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரியாத்:

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சரவதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



யோகாவின் பெருமையை உணர்ந்த சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர். ஆனால், சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது.

இந்நிலையில், சவுதி அரசு நேற்று யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை  அங்கீகரித்துள்ளது.

இதுதொடர்பாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், சவுதி அரேபியாவில் யோகா ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News