செய்திகள்

பிலிப்பைன்ஸ்: ஏசியான் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2017-11-12 12:05 GMT   |   Update On 2017-11-12 12:05 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள இந்தியா - ஏசியான் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மணிலாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ள பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவும், சீனாவும் தங்களது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. அதற்கு இணையாக இந்தியாவும் தனது நல்லுறவை பலப்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News