செய்திகள்

லண்டனில் ரூ.7 லட்சத்துக்கு வாங்கியும் போதை ஏறாத மது: சீன எழுத்தாளர் வழக்கு

Published On 2017-11-07 07:05 GMT   |   Update On 2017-11-07 07:05 GMT
லண்டனில் ரூ.7 லட்சத்துக்க வாங்கிய மதுவை குடித்தும் தனக்கு போதை ஏறவில்லை என்று சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டல் மது வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்வான மதுவகைகள் கிடைக்கும்.

இங்கு மிக குறைந்த மதுவே ரூ.2 லட்சத்துக்கும் அதிகம். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த எழுத்தாளர் ஷாங் வை என்பவர் அந்த ஓட்டலில் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த அதாவது ரூ.7 லட்சத்துக்கு மது வாங்கி குடித்தார்.

இந்த மது 1878-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பாரம்பரியமிக்கது. அதற்காகவே இந்த மதுவை வாங்கி குடிக்க வந்ததாக கூறினார்.

ஆனால் இந்த மது முழுவதை குடித்தும் அவருக்கு சிறிய அளவில் கூட போதை ஏறவில்லை. எனவே மீதம் இருந்த மதுவை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்தார்.

இதில் அவர் குடித்தது போலியான மதுபானம் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலின் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News