செய்திகள்

பின்லேடன் ஆவணங்கள் என்ற பெயரில் அமெரிக்கா பொய்களை பரப்புகிறது: ஈரான்

Published On 2017-11-03 10:28 GMT   |   Update On 2017-11-03 10:29 GMT
பின்லேடன் ஆவணங்கள் என்ற பெயரில் ஈரான் குறித்து பொய்யான தகவல்களை அமெரிக்கா பரப்புவதாக ஈரான் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
டெஹ்ரான்:

அமெரிக்காவில் உள்ள வர்தக மையம், பெண்டகன் மீது அல்கொய்தா இயக்கத்தினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தின் அதிரடி படையினர் சுட்டுக்கொன்று உடலை எடுத்துச் சென்றனர்.

அப்போது, அந்த வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்பூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை அதிரடி படையினர் கைப்பற்றினர். இதனை அடுத்து, ஒசாமா பின்லேடன் சம்பந்தப்பட்ட சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் கோப்புகளை அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை (சி.ஐ.ஏ) நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் சில ஆவணங்களில் இரட்டை கோபுரம் தாக்குதலில் ஈரானுக்கு சம்பந்தம் உள்ளதாகவும், அல் கொய்தா இயக்கத்திற்கு ஈரான் நிதியுதவி அளித்ததாகவும் தகவல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆவணங்களின் பெயரில் ஈரான் குறித்து பொய்யான தகவல்களை சி.ஐ.ஏ பரப்புவதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி முகம்மது ஜாவாத் ஸரிப் குற்றம் சாட்டியுள்ளார்.

அல் கொய்தா இயக்கத்திற்கு நிதியுதவியோ, ராணுவ ரீதியிலான உதவியோ ஈரான் செய்தது இல்லை என அவர் கூறியுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு விவகாரங்களில் ஈரான் உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News