செய்திகள்

வாழத் தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

Published On 2017-11-02 06:02 GMT   |   Update On 2017-11-02 06:02 GMT
பூமியை போன்று உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் மூலம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களை கண்டு பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் அயல் கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் வாழத்தகுதியுள்ள கிரகங்களில் கே.ஓ.ஐ.-7923.01 என்பவையும் ஒன்று. இது பூமியை போன்று 97 சதவீத பரப்பளவு கொண்டது. நாம் வாழும் பூமியை விட குளிர் சிறிது அதிகமாக உள்ளது. அதில் உள்ள நட்சத்தரங்கள் சூரியனை விட சிறிது குளிர்ச்சியானவை.

பூமியை போன்று இதமான வெப்பமும், குளிர்ச்சியான தண்ணீரும் அங்கு உள்ளது. மேலும் அக்கிரகத்தில் 70 முதல் 80 சதவீதம் திட படிவங்கள் உள்ளன.

புதிய கிரகங்கள் பலவற்றில் சூரியனை போன்று நட்சத்திர சுற்று வட்டா பாதைகள் உள்ளன. பல கிரகங்கள் நட்சத்திரங்களை சுற்றி வர 395 நாட்கள் ஆகின்றன. சில கிரகங்கள் 18 நாட்களிலேயே சுற்றி முடிக்கின்றன.
Tags:    

Similar News