செய்திகள்

பாகிஸ்தான்: ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

Published On 2017-10-18 15:12 GMT   |   Update On 2017-10-18 17:00 GMT
இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர்மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இஸ்லாமாபாத்:

இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர்மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பாக்கிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் கடந்த ஜூலை மாதம் அவர் உறங்கி கொண்டிருந்தபோது ஒரு வாளியால் அவர்மீது ஆசிட்டை வீசி கொன்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாஸ்மின் மீது முல்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த கொடூர வழக்கில் குற்றவாளி யாஸ்மினுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய மரண தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மாலிக் காலிக் மஹ்மூத் நேற்று தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News