செய்திகள்

ஈராக்: கிர்குக் கவர்னர் மாளிகையை ராணுவம் கைப்பற்றியது

Published On 2017-10-16 14:11 GMT   |   Update On 2017-10-16 14:11 GMT
ஈராக் நாட்டில் குர்திஸ்தான் போராளிகள் வசம் சிக்கியிருந்த கிர்குக் நகர கவர்னர் மாளிகையை அமெரிக்க அதிரடிப்படை உதவியுடன் ஈரான் ராணுவம் இன்று கைப்பற்றியது.
பாக்தாத்:

ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள கிர்குக் நகரை ஈராக் அரசுக்கு எதிரான குர்திஸ்தான் போராளிகள் கைப்பற்றி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தனர். இந்நகரை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் உதவியுடன் ஈரான் ராணுவத்தின் எலைட் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கிர்குக் நகருக்குள் நுழைந்த அரசு படையினர் நகரின் மையப்பகுதியில் இருந்த விமான நிலையத்தை கைப்பற்றினர். பின்னர், மத்திய பகுதிக்கு முன்னேறி சென்ற வீரர்கள் கிர்குக் கவர்னர் மாளிகையை கைப்பற்றினர்.

ஈராக் பிரதமர் ஹடர் அல்-அபாடி உத்தரவுப்படி கவர்னர் மாளிகையில் இருந்த குர்திஸ்தான் கொடி இறக்கப்பட்டு அங்கு ஈராக் நாட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதை உள்ளூர் ஊடகங்கள் செய்திகளில் காண்பித்து வருகின்றன.
Tags:    

Similar News