செய்திகள்

சீனாவை நெருங்கி வரும் கானூன் புயல்: மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

Published On 2017-10-15 10:12 GMT   |   Update On 2017-10-15 10:12 GMT
கானூன் என்ற புயல் சீனாவை நெருங்கி வருகிறது. இந்த புயலால் மணிக்கு 114 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்:
   
சீன நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. சீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களை வைத்து காலநிலைகளை வரையறுப்பது வழக்கம். சிவப்பு என்பது மிக மோசமான வானிலையை குறிக்கும். தற்போது ஆரஞ்சு வண்ணம் கொண்ட அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

அங்குள்ள சாங்ஜியாங், காங்டாங், வென்சாங், ஹைனான் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிஜியாங், காங்டாங், குவாங்சி மற்றும் ஹைனான் மாகாணங்களில் கனமழை பெய்யும் அனவும், சில இடங்களில் குறைந்தது 200 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

பலத்த காற்று வீசி வருவதால் ஹாங்காங்கில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் வழியாக செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News