செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜிபோட்டி சென்றடைந்தார்

Published On 2017-10-03 13:50 GMT   |   Update On 2017-10-03 13:50 GMT
இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுகொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று ஜிபோட்டி சென்றடைந்தார்.
ஜிபோட்டி:

ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் எத்தியோப்பா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் 500-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன.

உலகின் பல பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் சீனா ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபோட்டி நகரில் புதிதாக ராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஜனாதிபாதியாக பதவி ஏற்றுகொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று
ஜிபோட்டி சென்றடைந்தார். அங்கிருந்து எத்தியோப்பியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த் 6-ம் தேதி வரும் அங்கு தங்கி இருப்பார்.

45 ஆண்டுகளுக்கு பின்னர் எத்தியோப்பியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த், அங்குள்ள இந்திய சமூகத்தாருடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டில் மூன்று சர்க்கரை ஆலைகள் அமைக்கும் திட்டத்துக்காக இந்ர்ஹியா சுமார் 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதியுதவி செய்துள்ளதும், இருநாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக பரிவர்த்தனை சுமார் 100 கோடி டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News