செய்திகள்

லண்டன் சுரங்க ரெயில் குண்டுவெடிப்பு: 18 வயது வாலிபரை கைது செய்தது போலீஸ்

Published On 2017-09-16 14:49 GMT   |   Update On 2017-09-16 14:49 GMT
லண்டன் சுரங்க ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்:

லண்டன் நகரில் இயங்கும் சுரங்க ரெயிலை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். பரபரப்பான காலை வேளையில பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த வெடிவிபத்தில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பெருநகர லண்டன் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லண்டன் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பாக 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று காலை சுற்றித் திரிந்த அந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.



இதுபற்றி பெருநகர காவல்துறை அதிகாரி நீல் பாசு கூறுகையில், “இன்று காலை எங்கள் விசாரணையில் குறிப்பிடத்தக்க கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளித்தாலும், அச்சுறுத்தல் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றார்.
Tags:    

Similar News