செய்திகள்
குல்சூம் நவாஸ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மனைவிக்கு தொண்டை புற்றுநோய்

Published On 2017-08-23 05:12 GMT   |   Update On 2017-08-23 05:12 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மனைவி குல்சூம் நவாஸ் கடுமையான தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்த லண்டன் டாக்டர்கள் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மனைவி குல்சூம் நவாஸ். ஊழல் வழக்கு காரணமாக சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் நவாஸ்செரீப் நீக்கப்பட்டார்.

எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவரது மனைவி குல்சூம் நவாஸ் ‘லாகூர் என்.ஏ.120’ தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் குல்சூம் நவாஸ் கடுமையான தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்த லண்டன் டாக்டர்கள் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குணப்படுத்தக் கூடியது என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் லண்டனில் தங்கி இருக்கிறார். எனவே அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டார் என அவரது டாக்டர் கர்மானி தெரிவித்தார்.

இவருக்கான தேர்தல் பிரசார பணிகளை மத்திய வர்த்தக மந்திரி பெர்வைஷ் மாலிக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News