செய்திகள்

ஸ்பெயின்: 14 உயிர்களை பறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

Published On 2017-08-19 11:41 GMT   |   Update On 2017-08-19 11:41 GMT
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேனை மோதி 14 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பெய்ருட்:

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பார்சிலோனாவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான லாஸ் ராம்பலாஸில் மக்கள் கூட்டம் கூடியிருந்த நிலையில் வெள்ளை வேன் ஒன்று கூட்டத்துக்குள் தாறுமாறாகப் புகுந்தது. இதில் 14 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்துள்ள போலீசார் மொராக்கோ நாட்டை சேர்ந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் பிரச்சாரப் பிரிவு மற்றும் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான அமாக் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பார்சிலோனாவில் நடத்தப்பட்ட தாக்குதலை எங்களது ஆட்சிக்குட்பட்ட மாவீரர்கள்தான் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News